திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (11:41 IST)

புதன் பகவானை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

Puthan Worship
புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளலாம்.


நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலமாகத் திகழ்வது திருவெண்காடு. புதன் பகவான் என்பவர் நமக்கு புத்தியில் தெளிவைக் கொடுக்கக்கூடியவர். புத்தியில் பலத்தைக் கொடுக்கக் கூடியவர். காரியத்தில் தெளிவைத் தந்தருளக்கூடியவர்.

புதன் பகவானை வணங்கித் தொழுதால், கல்வியில் மேன்மை கிடைக்கப் பெறலாம். தொழிலில் முன்னேற்றத்தைத் தந்தருளுவார் புதன் பகவான். வியாபாரத்தில் அபரிமிதமான ஏற்றத்தையும் மாற்றத்தையும் தருவார் புதன் பகவான்.

தொடர்ந்து புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி வந்தால், திருமணத் தடை நீங்கும். முக்கியமான, நோய்களையெல்லாம் தீர்த்தருளுவார் புதன் பகவான். நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும்.