மாசி மாத பவுர்ணமியில் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

Lord Shiva
Sasikala|
சூரியனின் அதிதேவதை பரமேஸ்வரன். சந்திரனின் அதிதேவதை பார்வதிதேவி. ஆண் கிரக ராசியில் வரும் பெண் கிரகமான சந்திரன். பெண் கிரக ராசியில் வரும் ஆண் கிரகமான சூரியன். இதுதான் மாசி மக பவுர்ணமி நாளின் சிறப்பு அம்சம்.

எனவே இந்த நாட்களில் சிவனுக்குள் சக்தி ஐக்கியம், சக்திக்குள் சிவன் ஐக்கியம். சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபத்தை வணங்க இருவரின் அருளும் ஒருங்கே  கிடைக்கும். 
 
மாசி மாத பவுர்ணமியில் பார்வதி - பரமேஸ்வரரை வழிபட திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியின் ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்.
 
சிவபெருமான் வருண பகவானிற்கு சாப விமோசனம் தந்த நாள் மாசிமகம் என்பதால், அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்.
 
பார்வதி தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். எனவே அன்றைய தினம் சக்தி வழிபாடு மற்றும் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :