மகாளய பட்சத்தின்போது தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் !!

Mahalaya paksha
Sasikala|
மகாளய பட்சத்தின் போது ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்ப்போம். தர்ப்பணம் ஆரம்ப நாள் 02/09/2020  புதன்கிழமை.

1. முதலாம் நாள்: பிரதமை - பணம் சேரும்.
 
2. இரண்டாம் நாள்: துவிதியை - மகப்பேறு.
 
3. மூன்றாம் நாள்: திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்.
 
4. நான்காம் நாள்: சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்.
 
5. ஐந்தாம் நாள்: பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்.
 
6. ஆறாம் நாள்: சஷ்டி - புகழ் கிடைத்தல்.
 
7. ஏழாம் நாள்: சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
 
8. எட்டாம் நாள்: அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்.
 
9. ஒன்பதாம் நாள்: நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள்  பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
 
10. பத்தாம் நாள்: தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
 
11. பதினொன்றாம் நாள்: ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி.
 
12. பன்னிரெண்டாம் நாள்: துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
 
13. பதின்மூன்றாம் நாள்: திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்.
 
14. பதினான்காம் நாள்: சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
 
15. பதினைந்தாம் நாள்: மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.


இதில் மேலும் படிக்கவும் :