1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 02/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.


1. ரிஷபம்:
 
பலன்: இன்று தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள்.  திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை  செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.    
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6
 
2. சிம்மம்:
 
பலன்: இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய்  விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7
 
3. கன்னி:
 
பலன்: இன்று புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக  இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும்.  போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5
 
4. துலாம்:
 
பலன்: இன்று ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள்  பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை  ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 5
 
5. விருச்சிகம்:
 
பலன்: இன்று கவனமுடன் செயல்படவேண்டிய நாள். தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும்.  தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள்  வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 
 
6. மகரம்:
 
பலன்: இன்று வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப்  பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.  தைரியமாகச் செயல்படும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
 
7. கும்பம்:
 
பலன்:
இன்று பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7.