1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (16:18 IST)

திருவோண நட்சத்திர வழிபாட்டு பலன்களும் சிறப்புக்களும் !!

Thiruvonam star
வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்கு உரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.


வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மஹாபலியின் ஆணவத்தை அடக்கி மூன்று அடி மட்டுமே மண் கேட்டார் வாமனர். பலியும் கொடுத்தவுடன் வாமனர் பிரம்மாண்ட உருவெடுத்தார். பின்னர் மஹா பலியை மன்னித்து பாதாள லோகத்தின் சக்கரவர்த்தியாக நியமித்தார் பரமாத்மா.

கேரள மக்களை அதாவது தன் மக்களை பார்க்க வருடம் ஒருமுறை பூமிக்கு வருகிறார் மஹா பலி சக்ரவர்த்தி. அதை ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.

மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான்.

பிராட்டியை ஒப்பிலியப்பன்   மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேறுடன் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று விஷ்ணு புராணம் மற்றும் சிவ புராணங்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள்.