1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (09:16 IST)

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்!

Monthly astro
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ  - பஞசம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன்  - பாக்கிய    ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
16-08-2024 அன்று சூரியன்  களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-08-2024 அன்று சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-08-2024 அன்று செவ்வாய் பஞசம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-08-2024 அன்று புதன் களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
மகர ராசியினரே  இந்த மாதம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம்.  ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.  எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது.

கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்ப வர்கள்  பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.  வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவன மாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைக ளின் கல்வி தொடர்பான  விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.  வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன்  சுமுகமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.

உத்திராடம்:
இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

திருவோணம்:
இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.

அவிட்டம்:
இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27