கரூர் அருகே சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதரை பொதுமக்கள் வழிபாடு!

ஆனந்த குமார்|
கரூர் அருகே மாரியம்மன் கோயிலில் ஆடி 18 விழாவையொட்டி சயனக் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவரும் அத்திவரதரை 100-க்கணக்கான பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்தசரஸ் குளத்திலிருந்து எழுந்து அருள்பாலிக்கும் அத்திவரதரை லட்சக்கணக்கான மக்கள் தினசரி தரிசனம் செய்வது வருவது அனைவரும் அறிந்த விசயம். 
 
இந்நிலையில், காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்களுக்காக கரூர் அருகில் உள்ள லாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் ஆலயத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் சயனநிலையில் உள்ள அத்திவரதரை மக்கள் தரிசிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
சயன நிலையில் உள்ள பெருமாள் சிலையை அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு, காஞ்சிபுரம் அத்திவரதருக்கு செய்யப்பட்டுள்ளது போல பட்டு வஸ்திரங்கள், மலர் மாலைகளால் அச்சு, அசலாக காஞ்சிபுரம் அத்திவரதர் போல அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வழிபட  வைக்கப்பட்டுள்ளது.
     
இன்று ஆடி 18 என்பதால், காவிரி ஆற்றுக்கு ஆடி 18 விழாவை கொண்டாடிவிட்டு வரும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் மட்டுமல்லாது,  காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் இந்த அத்திவரதரை செய்து வருகின்றனர்.
 
பேட்டி: கார்த்திகேயன் - கோயில் அர்ச்சகர் - இலாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் ஆலயம் - கரூர் மாவட்டம்.
 


இதில் மேலும் படிக்கவும் :