செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும்.


கிரக தோஷங்கள் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும். 
 
தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபம் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள்  கிடைக்கும்.
 
அவருக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலையாக போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றினால் குழந்தை  பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும், வெற்றிலை மாலை சாற்றினால்  திருமணத்தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். 
 
ராம நாமம் கேட்கும் இடங்களில் அனுமன் அமர்ந்திருப்பார் என்பது ஐதீகம். ராமபிரானின் சேவகன் அனுமனை அவர் அவதரித்த நாளில் வணங்கினால்  தொல்லைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 
அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனுமனை விரதம்  இருந்து வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை  குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.