கம‌லி - பு‌த்தக ம‌தி‌ப்‌பீடு

WD
அழ‌கி‌ரி ‌விசுவநாத‌ன் ஒரு கதை சொ‌ல்‌லி‌யி‌ன் நே‌ர்‌த்‌தி‌யி‌ல் கதையை நக‌ர்‌த்‌தி‌ச் செ‌ல்‌கிறா‌ர். கனமான கதை‌க்கள‌ம் எ‌ன்றாலு‌ம் இய‌ல்பான நகை‌ச்சுவை அ‌ங்க‌ங்கே ப‌ட்டாசு கொளு‌த்து‌கிறது.

`ர‌யிலு ‌கி‌யிலு ‌கிடை‌க்கலையா?'
`ர‌யிலு இரு‌க்கு. ‌கி‌யிலு எ‌ங்கடி இரு‌க்கு?'

`வாண வேடி‌க்கை ம‌ட்டுமா பா‌ர்‌த்தோ‌ம்? பாண வேடி‌க்கை ‌எ‌ல்லா‌ம் பா‌ர்‌த்தோ‌ம்.'

`ஆபரேச‌ன் ச‌க்‌ஸ‌ஸ். ஆனா‌ல் பேச‌ண்‌ட் சாக‌வி‌ல்லை.' - இ‌ப்படி ‌நிறைய சொ‌ல்லலா‌ம்.

அதே‌ப்போல இவரது எழு‌த்து சாது‌ரிய‌த்து‌க்கு சா‌ட்‌சியாக இ‌ன்னொரு இட‌ம். `இவ‌ர்க‌ள் ம‌ந்‌‌தி‌ரியாக வ‌ந்தாலாவது ல‌ஞ்ச‌ம் வா‌ங்காம‌ல் இரு‌ப்பா‌ர்க‌ள்' எ‌ன்று சொ‌‌ல்லு‌கிற இட‌த்‌தி‌ல் - அர‌சிய‌ல் ல‌ஞ்ச‌க் காடாக ஆ‌கி‌வி‌ட்டதை சொ‌ல்லாம‌ல் சொ‌ல்லு‌‌ம் லாவக‌ம் - அழகு.

த‌ன்னை பராம‌ரி‌த்த ராஜதுரை இற‌ந்த செ‌ய்‌தி கே‌ட்டதுமே தானு‌ம் இற‌ந்து ‌விடு‌கிற அரவா‌ணி ராஜா‌த்‌தி‌யி‌ன் பா‌த்‌திர‌ப் படை‌ப்பு மன‌தி‌ல் ‌நி‌ன்று ‌விடு‌கிறது. அதுபோ‌ல் இ‌ன்னொரு மு‌க்‌கிய பா‌த்‌திர‌ம் நட‌த்துன‌ர் முர‌ளி‌யி‌ன் மனை‌வி ம‌ஞ்சுளா. பெரு‌ம்பா‌ன்மை ப‌ெ‌ண்க‌ளி‌ன் ‌பிர‌தி‌‌நி‌தியாக ம‌ஞ்சுளாவை‌ப் பா‌ர்‌க்க முடி‌கிறது.

கணவ‌ன் ஒரு பெ‌ண்‌ணிட‌ம் போனா‌ன் எ‌ன்‌கிற செ‌ய்‌தி ம‌ஞ்சுளா கா‌தி‌ல் எ‌ட்டி‌வி‌ட்டது. மறுநா‌ள் எதுவு‌ம் நட‌க்காதது போ‌ல் கணவ‌ன் வரு‌கிறா‌ன். எ‌ன்ன செ‌ய்‌திரு‌ப்பா‌ள்?

`இ‌னிமே எ‌ங்கயாவது பொ‌‌ம்பளை‌ங்க‌கி‌ட்ட போ‌னீ‌ங்க‌ன்னு ‌ரி‌ப்போ‌ர்‌ட் வ‌‌ந்து‌ச்சு.. குழ‌ந்தைகளை அழை‌ச்‌சு‌கி‌ட்டு எ‌ன் அ‌ப்பா ‌வீ‌ட்டு‌க்கு போ‌யிடுவே‌ன்.' எ‌ன்று சொ‌ன்னதா‌ய் எழுது‌கிறா‌ர் ஆ‌சி‌ரிய‌ர்.

இ‌ப்படி‌த்தா‌ன் ஒரு பெ‌ண் ‌எ‌ளிதாக எடு‌த்து‌க் கொ‌ள்வாளா? ஒரு ஆ‌ண் இ‌ன்னொரு பெ‌ண்‌ணிட‌ம் போன செ‌ய்‌தி எ‌ளி‌தி‌ல் ம‌ன்‌னி‌க்க‌க் கூடியதா? பேயா‌ட்ட‌ம் ஆடி‌விட மா‌ட்டா‌ர்களா? இ‌ப்படி அலையலையா‌ய் கே‌ள்‌விக‌ள் எழு‌கி‌ன்றன.

உ‌ண்மை‌யி‌ல் பெரு‌ம்பா‌ன்மை த‌மி‌ழ்‌ப் பெ‌ண்க‌ள் ம‌ன்‌னி‌‌த்து ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க் கூடியவ‌ர்களாக‌த்தா‌ன் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ம‌ற்ற நாடுகளை ஒ‌ப்‌பிடு‌ம்போது த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ‌விவாகர‌த்து குறைவாக இரு‌க்‌கிறது. ‌சில இட‌ங்‌கிள‌ல் வ‌ந்தாலு‌ம் ‌மிக‌க் கவனமாக‌‌க் கைளாள‌ப் ப‌ட்ட பா‌‌த்‌திர‌ப் படை‌ப்பாக ம‌ஞ்சுளா படு‌கிறா‌ள்.

இ‌ப்படி சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே போக இரு‌க்‌கிறது ‌நிறைய ‌விஷய‌ம்.

சொ‌ல்‌லி‌க் கே‌ட்பதை‌விட பு‌தின‌த்தை வா‌சி‌க்கு‌ம் அனுபவ‌ம் அலா‌தியானது. அரவா‌ணிகளு‌க்கு நலவா‌ரிய‌ம் அமை‌த்து ந‌ல்லது செ‌ய்வது ஒரு ப‌க்க‌ம் கண‌க்க‌மி‌ல்லாம‌ல் நட‌க்க‌ட்‌டு‌ம். இ‌ன்னொரு ப‌க்க‌ம் கம‌லி போ‌ன்ற அரவா‌ணி இல‌க்‌கிய‌ங்க‌ள் ம‌க்க‌ளி‌ன் வா‌சி‌‌ப்பு‌க்கு ‌கிடை‌க்‌கிற ஏ‌ற்பாடு‌ம் வே‌ண்டு‌ம். இதுபோ‌ன்ற இல‌க்‌கிய‌ங்களே சமூக மா‌ற்ற‌த்தை ‌விரை‌ந்து ஏ‌ற்படு‌த்த உதவு‌ம்.

இ‌ந்த உல‌கி‌ல் எதுவு‌ம் ‌விம‌ர்சன‌த்து‌க்கு அ‌ப்பா‌ற்ப‌ட்டத‌ல்ல. ஆனாலு‌ம் இ‌ந்த பு‌தின‌ம் ‌விம‌ர்சன‌த்து‌க்கு அ‌ப்பா‌ல் வை‌த்து‌ பா‌ர்‌க்கு‌ம் தகு‌திகொ‌ண்டது. இது கூட ஒரு வகை‌‌யி‌ல் ‌விம‌ர்சன‌ம்தா‌ன் எ‌ன்று சொ‌ல்லு‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் - இதுதா‌ன் இத‌ற்கு ச‌ரியான ‌விம‌ர்சன‌ம் எ‌ன்பே‌ன்.

அரவா‌ணிகளை‌ப் போ‌ல் ஒது‌க்குதலா‌ல் பு‌ண்ப‌ட்டு‌ப் போ‌யிரு‌க்கு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் கு‌றி‌த்து‌ம் இ‌ப்படியொரு த‌ன்ன‌ம்‌பி‌க்கை தரு‌ம் பு‌தின‌த்தை எழு‌த்தாள‌ர் அழ‌கி‌ரி ‌விசுவநாத‌ன் படை‌த்த‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ன் ஆசையையு‌ம் ப‌திவு செ‌ய்‌கிறே‌‌ன். அத‌ற்கு கால‌ம் ஒ‌த்துழை‌க்‌க‌ட்டு‌ம்.

ந‌ன்‌றி.

துரை நாகராஜ‌ன்.

இதில் மேலும் படிக்கவும் :