தெய்வக் குழந்தைகள்

- மு. பெருமாள்.

Webdunia|
அதில் உள்ள செல்கள் செயல்பட துவங்கும். பிறந்தவுடன் அழாத குழந்தைகளின் மூளை செல்கள், ரத்தம் ஓட்டம் இன்றி இறந்துவிடுகின்றன. இதனால் அந்த குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது.

இதுபோன்ற குழந்தைகளை சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பிற மருத்துவ முறைகளின் மூலமாகவும் குணப்படுத்தமுடியும். இது தவிர, மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படியும் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இதனால் சமீபகாலமாக, நர்சரி பள்ளிகள் போன்று, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளும் அதிகளவில் தோன்றி வருகின்றன. மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் மன வளர்ச்சியைத் தூண்டக் கூடிய தனித்த பாடத் திட்டங்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப, பிசியோதெரபி, பேச்சுப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளிலும் தற்போது சிறப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன.

மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளை பொருத்தவரை, அவர்கள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்திச் செய்துக்கொள்ளும் நோக்கில்தான் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முறையான மருத்துவச் சிகிச்சை, பராமரிப்பு, பயிற்சி போன்றவற்றை அளிப்பதன் மூலம், அவர்களாலும் சாதாரண குழந்தைகளுக்கு இணையாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்த முடியும்.
எனவே, மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள், சமூகத்தின் பார்வைக்கு பயந்து தங்களது சிறப்புக் குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி வைக்காமல், சைதாப்பேட்டை, தி.நகர், மந்தவெளி (ஆந்திரா மகிளா சபா மருத்துவமனை), போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, கோட்டூர்புரம், தரமணி, மே.மாம்பலம், கே.கே.நகர் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் சிறப்புப் பள்ளிகளில் சேர்த்து முறையான பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளும் வாழப் பிறந்தவர்களே என்பதை உணர்ந்து, அவர்களை ஊக்குவிப்போம்.

எதிர் காலத்தில் ஓர் ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாக
வழிவகை செய்வோம்!.


இதில் மேலும் படிக்கவும் :