ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Caston
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (13:57 IST)

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தந்த அனுமதியை உச்சநீதிமன்றம் தடை செய்தது!

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தந்த அனுமதியை உச்சநீதிமன்றம் தடை செய்தது!

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.


 
 
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா, ஆகியோர் மத்திய அரசின் அந்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
 
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பொங்கல் விழாவை ஒட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. மக்கள் பெருமளவில் போராட்டங்கள் செய்தனர். தமிழகமே பரபரப்புடன் காணப்பட்டது.
 
பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் தமிழகத்தில் வலுத்து வந்தது அப்போது.
 
இப்போது வரைக்கும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதியில்லை. 2017-ஆவது ஜல்லிக்கட்ட நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.