பகவ‌‌த் ‌கீதை‌யி‌ல் ‌கிருஷ‌்ண‌‌ரி‌‌ன் அருளுரைகள்...!

Lord Krishna
எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்புகொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப்படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.
பிறப்பால் யாவரும் சமமே. தர்மமுடைய செயல்களை செய்வதாலும் நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலும் தான் ஒருவன்  மேன்மையான நிலைக்கு உயர்கிறான்.
 
புத்தி, ஞானம், மயக்கமின்மை, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை,  அஹிம்சை, திருப்தி, தபம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகிய பல்வித பாங்குகள் உயிர்களுக்கு என்னிடத்திருந்தே உண்டாகின்றன.
 
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாய் இருக்கிறேன் எனக்கு பகைவனுமில்லை. நண்பனுமில்லை. ஆனால் யார் என்னை பக்தியோடு பூஜிக்கிறார்களோ அவர்கள் என்னிடத்தும் நான் அவர்களிடத்தும் உள்ளேன்.
 
இழந்ததை நினைத்து வருந்தாதே...! எதை நீ இழந்தாலும் அது, இன்னொரு வடிவில் உன்னை வந்துசேரும்.
 
- பகவத் கீதை


இதில் மேலும் படிக்கவும் :