வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சூட்சுமமாக நம்மிடமே  திரும்புகின்றன.
யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர். முடியுமானால் இன்னொரு நல்ல நம்பிக்கையை அவனுக்குள் செலுத்துங்கள்.
 
இயற்கைக்கு கீழ்ப்படியாமல் இருப்பது தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியாகும். வரலாற்றைப் பார்த்தால் மனிதவளர்ச்சி இதனால் தான்  உண்டாகிறது.
 
மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத்தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்படத் தேவையில்லை.
 
தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும்  இறைவனே முன்நின்று உதவுவார்.
 
தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால், மனவலிமையை மேலும் அதிகப்படுத்தி பாடுபடுங்கள். விடாமுயற்சியுடன் செயலை  நிறைவேற்றி மகிழ்வதே உயர்வாழ்விற்கான அறிகுறியாகும்.
 
பெரியவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
 
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.
 
நமக்கு மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக்காக உயிரை விடுவதே மேலானது.
 
தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களை கீழானவர்களாக மாற்றிவிடும்.
 
சண்டை போடுவதிலும், குறைகூறிக் கொண்டிருப்பதிலும் கூட என்ன பயன் இருக்கிறது. நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு  உதவப் போவதில்லை.
 
நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும்  ஆக்குகின்றன.