வாஸ்துப்படி செய்யக்கூடாத சில செயல்கள் என்ன தெரியுமா...!!

அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது. வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.  எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம்  வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது.
வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும். ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி  மாடம் கட்டக்கூடாது.  ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. 
 
ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.
 
ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு பகுதிகளில் அமைக்கக் கூடாது. வீடு  மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க கூடாது.
 
வீட்டின் வடக்கே, கிழக்கே உயரமாக வளரும். நிழல் தரும் மரங்கள் வளர்க்க கூடாது. வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான  மரங்களை வெட்டக் கூடாது.
 
வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது. வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும் செப்டிக் டேங்க்  அமைக்கக் கூடாது.
 
வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும், கிழக்கேயும் உயரமாக அமைக்கக் கூடாது. வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின் மேல் பூந்தொட்டி  வைக்கக் கூடாது.
 
வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை இனாமாகக் கூட வாங்கி சேர்க்கக் கூடாது. ஒரு வீட்டினை இருவருக்கு  பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.


இதில் மேலும் படிக்கவும் :