வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

துன்பம் குறித்து புத்தரின் பொன்மொழிகள்...!

மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்.
துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால், நாம் துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம்.
 
தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது.
 
சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.
 
எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.
 
கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.
 
பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனைதான்.  பிரியம் இல்லாதவனிடம் அன்பில்லை. அதனால் வேதனைதான் மிஞ்சும்.
 
துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.