கோவிலுக்கு நகை அணிந்து செல்வது நல்லது: ஏன் தெரியுமா?
கோவில்களுக்கு தங்க நகைகள் அணிந்து செல்வது அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் ஆகிய மூன்று வழிகளிலும் நன்மை தரும் என்பது தெரியவந்துள்ளது.
கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என அனைத்தும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவையோடு தொடர்புடையவை.
கோவில்களில் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள் அதிகமாக பரவியிருக்கும். காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து அதன் மீது சிலையை அமைத்து மூலஸ்தானம் உருவாகும். அந்த செப்பு தகடுகள் பல நல்ல அலைகளை கிரகித்து அதை பல மடங்காக அந்த சிலை மூலம் வெளிக்கொண்டு வரும்.
இதனால் நகைகள் அணிந்து செல்வதால் காந்த் அலைகளை நகையில் உள்ள உலோகங்கள் பற்றிக்கொள்ளும். இது அறிவியல் பூர்வமாக உடலுக்கு நன்மை கொடுக்கும் என கூறப்படுகிறது.