புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (14:18 IST)

மெரினாவில் கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம் - சென்னையில் பரபரப்பு

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை மெரினா கடற்கரையில் சில வாலிபர்கள் போராட்டம் நடத்தி வருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது.


 

 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்களத்திலேயே உண்பதும், உறங்குவதும், எலிக்கறி சாப்பிடுவதாக அவர்கள் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், தற்போது சென்னை மெரினா கடற்கரையில், தண்ணீரில் இறங்கி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரெனெ போராட்டத்தை துவக்கினர். அதில் சிலரை போலீசாரை அங்கிருந்து இழுத்து சென்றனர். ஆனால், அதில் சிலர் தண்ணீர் ஆழமாக உள்ள பகுதிக்கு சென்று நின்ற படி போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் போராடுகிறோம். எங்கள் போராட்டம் பற்றி கேள்விபட்டு இன்னும் பலர் வந்து கொண்டுருக்கின்றனர். எனவே, இப்போராட்டம் ஓயாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில இளைஞர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்களை மீனவர்களின் உதவியோடு மீட்ட போலீசார், அங்கிருந்து அழைத்து சென்று வேனில் ஏற்றி அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
 
மெரினாவில் ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடந்ததையடுத்து, தற்போது அந்த பகுதியில் போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் அங்கு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.