நண்பனுக்கு நிச்சயித்த பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 19 டிசம்பர் 2016 (16:03 IST)
நாகர்கோவில் அருகே நண்பனுக்கு திருமணம் செய்ய நிச்சயத்து இருந்த பெண்ணை வாலிபர் ஏமாற்றி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகர்கோவில் கருங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், கார் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கல்யாண மாப்பிள்ளை, வள்ளியாவிளையை சேர்ந்த தனது நண்பரிடம், தனக்கு திருமண பேச்சுவார்த்தை நடைபெறும் வருவதாக கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் அந்த நண்பர் தனது சித்து வேலைகளைத் தொடங்கி உள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம் தொலைபேசியில் அறிமுகம் செய்துகொண்டு மெல்ல பேசத் தொடங்கி உள்ளார். அதன் பிறகு, தனது நண்பர் குறித்தே மோசமாக சித்தரித்துள்ளார். அவரை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை கெட்டுவிடும் என்றும் கூறியுள்ளார்.

இதனை அந்த பெண்ணும் நம்பி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், திருமண பெண்ணிடம் அழகை வர்ணித்தும், ஆசை வார்த்தைகளையும் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் திருமணப் பெண் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்துகொண்டு அதனை தனது இச்சைக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். தான் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறிக் கத்தியுள்ளார். இதனால் பயந்த அந்த வாலிபர், திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்துவிட்டு சென்றுள்ளார். இதனால், இது குறித்து அவர் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், அந்த வாலிபர் திருமண பெண்ணிடம் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். மேலும், அந்த பெண் தொலைபேசியில் அழைத்தாலும் பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண் நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :