அதிமுக அணிகள் இணையாதது ஏன்? திடுக்கிடும் காரணங்கள்


sivalingam| Last Modified செவ்வாய், 16 மே 2017 (06:06 IST)
அதிமுகவின் இரு அணிகளை இணைக்க இரண்டு அணிகளின் தலைவர்களும் எடுத்த முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து கொண்டே இருந்தது. இதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருந்த நிலையில் தற்போது உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது.இந்த இணைப்பு ரத்து ஆனதற்கு முதல்வர் பதவியோ, பொதுச்செயலாளர் பதவியோ காரணம் இல்லையாம். கூவத்தூரில் செய்துகொண்ட ஒப்பந்தப்படி 3 மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் சரியாக தவணை தரப்பட்டு வருகிறதாம். தங்கம், கரன்ஸி என சுகம் கண்டுகொண்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள், இரு அணிகளும் இ


 
ணைந்தால் இந்த பரிசு கிடைக்காதே என்ற காரணத்தால் இணைப்பை உடைத்து வருகிறார்களாம்.

ஓபிஎஸ் புண்ணியத்தில் தங்களுக்கு காசு மழை பொழிந்து வருவதாகவும், தயவுசெய்து, இணைந்திடாதீங்க. இப்படியே விட்டாத்தான் எங்களை அடிக்கடி கவனிப்பார்கள்’ என்றும் வெளிப்படையாகவே கூறுகின்றார்களாம். அதுமட்டுமின்றி அ.தி.மு.க இணைப்பு நடக்காமல் தடுக்க, ஓ.பி.எஸ் குரூப்பில் உள்ள ஒருசிலரும் கவனிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :