செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (17:01 IST)

கவுண்டமணி குறித்து புரளி கிளப்பும் நல்ல மனிதர் யார்? - செய்தித் தொடர்பாளர் கடுப்பு

கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் முரளி விஜய் கூறியுள்ளார்.
 

 
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர், பறப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர், அடிக்கடி இறந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்புவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முதற்கொண்டு கவுண்டமணி உடல்நிலை குறிதது சமூக வலைதளங்களில் வந்தது பரவி வந்தது.
 
இந்நிலையில், இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை விடுத்துள்ள அறிக்கையில், ”அவ்வப்போது கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை.
 
சமீபத்தில்கூட புன்னகை அரசி கே.ஆர்.விஜயா குறித்து இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்ததும் வதந்திகள் புஸ் ஆனது. சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
 
புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவரும். அந்தப் படத்தின் துவக்க விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். இந்தியா முழுவதும் அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.