ஜெ.வுக்கு வழங்கப்பட்ட பூனைப் படை எங்கே? கேள்விகளை அடுக்கும் ஓபிஎஸ் அணி
ஜெயலலிதாவுடன் இருந்த கருப்பு பூனை படையை திரும்பப் பெற அதிகாரம் வழங்கியது யார்? என ஓபிஎஸ் அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓபிஎஸ் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை கொண்டு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணி கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனை படையை திருப்பி அனுப்பியது யார்? அதற்கான உத்தரவை யார் பிறப்பித்தது? ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அப்பல்லோவில் இருந்த 22 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளது. ரத்த சொந்தங்கள் இல்லாமல் அவரது மூச்சை நிறுத்த அதிகாரம் கொடுத்தது யார்? என பல கேள்விகளை அடுக்கியுள்ளனர்.