வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2016 (02:41 IST)

சசிகலா எப்போது பொதுச் செயலாளராக பதவி ஏற்கிறார்?

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா வருகின்ற 31ஆம் தேதி பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பரபரப்பான சூழ்நிலையில் முதன்முறையாக அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு தீர்மானத்தை பெற்றுக் கொண்ட சசிகலா பதவி ஏற்க சம்மதம் தெரிவித்ததாக பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பதவி ஏற்பு விழா தலைமை அலுவலகத்தில் தான் நடைபெறும். இது தொடர்பான ஆலோசனை தான் தற்போது நடந்ததாக கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில் வரும் 31ம் தேதி சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.