வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (08:28 IST)

திமுகவில் சசிகலா புஷ்பா எப்போது?

திமுகவில் சசிகலா புஷ்பா எப்போது?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா திமுகவில் சேர்வார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் சேரவில்லை. இந்நிலையில் அவர் விரைவில் திமுகவில் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வருகின்றன.


 
 
சசிகலா புஷ்பா அதிமுகவுக்கு எதிராக உருவெடுக்க ஆரம்பித்ததும் அவருக்கு ஆதரவாக கட்சியில் இருப்பவர்களை களையெடுக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா. அந்த வகையில் சசிகலா புஷ்பா ஆதரவாளரான நெல்லை மாவட்டம், ராதாபுரம் யூனியன் சேர்மனாக இருக்கும் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
 
இவர் நேற்று முன்தினம் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் அந்த கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்தார். சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் திமுகவில் சேர்ந்துள்ள நிலையில் சசிகலா புஷ்பாவும் திமுகவில் ஐக்கியமாகும் நேரம் விரவில் உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா புஷ்பா திமுகவில் சேர்க்க கனிமொழி ஏற்கனவே அதிக ஆர்வம் காட்டினார்.