காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் ஏன் கை ஏந்துகிறோம்? : வைரல் வீடியோ

காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் ஏன் கை ஏந்துகிறோம்? : வைரல் வீடியோ


Murugan| Last Modified வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (16:42 IST)
கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அங்கு பல கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

 
ஒவ்வொரு முறையும், கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை, தமிழகம் நீதிமன்றம் மூலம் போராடித்தான் பெற வேண்டியுளது.
 
இந்நிலையில், நாட்டு நடப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வரும் ‘புட் சட்னி’ குழு, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
 
அதில் தமிழகத்தில் உள்ள ஆறுகள் அழிப்பு, மணல் கொள்ளை என காவிரி ஆறு வற்றிப் போனதற்கான அனைத்து காரணங்களையும் அலசியுள்ளனர்.
 
தவறுகளை நாம் செய்து விட்டு, தற்போது காவிரிக்காக, கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம் என்கிற தொனியில் விபரங்களை அடுக்குகிறார்கள்.
 
பயனுள்ள அந்த விழிப்புணர்வு வீடியோ உங்கள் பார்வைக்கு..
 


இதில் மேலும் படிக்கவும் :