வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , புதன், 12 ஜூன் 2024 (13:54 IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

மதுரை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட நிர்வாகி விஜய் அன்பன் கல்லாணை  ஏற்பாட்டில் சுமார் 15லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளாக (வருடாந்திர திட்டமாக 15 தையல் மிஷின், 6 லேப்டாப், கல்வி தொகை, ஆடு வழங்குதல், 50முதியோர் ஊக்க தொகை, 50 பெற்றோர்கள் ஊக்க தொகை)-யில்  2 நபர்களுக்கு தையல் மிஷின், 2 நபருக்கு லேப்டாப், கல்வி ஊக்க தொகையாக இருவருக்கு ரூ.33,340 மற்றொரு நபருக்கு ரூ.20000 மற்றும் 15 நபர்களுக்கு திருமண உதவி தொகை, கணவரை இழந்தவர்கள் சிறு தொழில் துவங்க 15 பேருக்கு ரூ.10000 வழங்கப்பட்டது.
 
அதனை தொடர்ந்து 9 பேருக்கு ஆடு, 2 பேருக்கு மாடு, 400 பேருக்கு புடவை, 100 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், 9 முதியோர்களுக்கு உதவி தொகையாக ரூ.500/-, 50 மாணவர்களுக்கு உதவி தொகை ரூ1000/-, 10 பெற்றோர்களுக்கு உதவி தொகையாக ரூ.10000 பொன்மகள் சேமிப்பு கணக்கு துவங்க 3 பெற்றோருக்கு தலா ரூ.6000 என கட்சியின் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்  வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சியில்  தமிழக வெற்றிக் கழக மதுரை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.