தமிழகத்தில் இன்றும் கள்ளக்கடல் நிகழ்வு.. கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!
கடலில் ஏற்படும் கள்ளக்கடல் நிகழ்வு என்று கூறப்படும் கடல் சீற்றம் இன்றும் நீடிக்கும் என்பதால் தமிழக கடற்கரையோர பகுதிகளில் ராட்சச அலைகள் எழும் என்றும், இன்றும் கள்ளக்கடல் நிகழ்வு நடைபெற வாய்ப்பு இருப்பதால் கடற்கரை ஓரங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
காற்று மாறுபாட்டால் நேற்று இரவு வரை கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றம் இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அது இன்று வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை வரை கடல் சீற்றம் இருக்கும் என்பதால் கடலோர பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் நிகழ்வு என்று சொல்லப்படும் ராட்சச அலைகளால் கடலில் சீற்றம் இருக்கும் என்றும் இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக திருச்செந்தூரில் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டவில்லை என்றும் அதனால் பக்தர்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.
Edited by Siva