வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (14:09 IST)

பெண்களை ஆபாசமாக பதிவு செய்த யூடியூபர்.. விருதுநகருக்கு வந்து கைது செய்த புதுவை போலீசார்..!

விருதுநகரை சேர்ந்த ஒருவர் பெண்களை ஆபாசமாக தனது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளதை அடுத்து இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை புதுவை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
புதுவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் விருதுநகரை சேர்ந்த யூடியூபர் துர்க்கை ராஜ் என்பவர் செல்போனில் பேசியதாகவும் அப்போது அவர் பதிவு செய்த ஆடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ஆபாசமாக சித்தரித்து வீடியோவாக தனது யூடியூப் சேனலில் பதிவு செய்ததாகவும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் புதுவை காவல்துறையில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த புதுவை காவல்துறையினர் விருதுநகர் வந்து துர்க்கைராஜை கைது செய்தனர்.
 
மேலும் அவரது யூடியூப் சேனலைஆய்வு செய்தபோது இதேபோன்று 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் அநாகரீகமாக பேசியதும், அவர்கள் குறித்த ஆபாசமான வீடியோக்களை பதிவு செய்ததும் தெரிய வந்துள்ளது.
 
இதனை அடுத்து அவரை கைது செய்த புதுவை காவல் துறையினர் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் துர்க்கை ராஜின் இரண்டு யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளதாக புதுவை போலீசார் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran