புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (23:04 IST)

டப் மாஷில் விஜயகாந்த் மனைவி மற்றும் மகன். வைரலாகும் வீடியோ

கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் பலரை டப் மாஷ் வீடியோ ஆட்டி வைத்து வருகிறது. பிரபலங்கள் மற்றும் சினிமா டயலாக்குகளை வீடியோ எடுத்து டப் மாஷில் பதிவு செய்து வருவது வைரலாகி வருகிறது.



 


இந்த நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தனது மகனிடம் பேசுவது போன்ற ஒரு டப் மாஷ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் சரண்யா, தனுஷ் பேசும் காட்சி இடம்பெறுகிறது.

அடப்பாவி உனக்கு லவ்வெல்லாம் வருமா என பிரேமலதா கேட்க அதற்கு விஜயகாந்த் மகன் என்னையெல்லாம் யாரும்மா லவ் பண்ணுவா? என்று பதில் அளிக்க அதற்கு பிரேமலதா, 'உனக்கென்னடா குறைச்சல், அழகில்லையா, அறிவில்லையா? என்று திருப்பி கேட்க, 'வேலையில்லம்மா..என்று விஜயகாந்த் மகன் பதில் கூறுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.