14 பேர் கடிதம்; கதிகலங்கி போன விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் எழுதிய கடிதம் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கடிதத்தின் எதிரொலியாக விஜயகாந்த் தன்னுடைய அனுகுமுறையை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் கட்சியில் யாருடனும் கேட்காமல் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பாத கூட்டணியை அமைத்ததாகவும் எந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
இந்த கடிதத்தில் முக்கிய ஒன்றாக கூறப்படுவது விஜயகாந்த் நடத்தி வரும் டிரஸ்ட் தொடர்பான கணக்குகளை பற்றி அவர்கள் கேட்டது. தேர்தல் நிதியாக கடந்த காலங்களில் வசூலித்து தந்த ரூ.500 கோடி எங்கே என்ற கேள்வி விஜயகாந்தை நிச்சயம் ஆட்டம் காண வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
எதற்கெடுத்தாலும் கோபப்படும், கட்சியை கலைக்கவும் தயங்கமாட்டேன் என சொல்லும் விஜயகாந்திடம், தயவு செய்து கட்சியை கலைத்து விட்டு, எங்களை பிழைக்க விடுங்கள் என அதிரடியாக அவர்கள் கூறி இருப்பது. தாங்களும் அடுத்த கட்சிக்கு போக தயாராக இருக்கிறோம் என விஜயகாந்துக்கு விடுத்த சவாலாகவே பார்க்கப்படுகிறது.
கட்சியினரின் இந்த கடிதத்தை சற்றும் எதிர்பார்க்காத விஜயகாந்த், குற்றச்சாட்டுகளை வைத்த மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக போனில் பேசியதாக கூறப்படுகிறது.
அவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்ட விஜயகாந்த, கட்சியில் இப்பொழுது யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம், தனக்கு ஒத்துழைப்பு தாருங்கள், நடந்த சம்பத்துக்கு மன்னிப்பு கேட்டதாகவும், டிரஸ்ட் தொடர்பான கணக்குகளை சமர்ப்பிக்க கூட தயாராக இருப்பதாகவும் விஜயகாந்த் பேசியதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால் விஜயகாந்தின் இந்த சமரச பேச்சை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவே கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தேமுதிக வட்டாரத்தில் எகிறி உள்ளது.