1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 2 மார்ச் 2017 (13:12 IST)

உம்மனா மூஞ்சி கேப்டன்: வருத்தத்தில் தொண்டர்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாரையும் பார்த்து சிரிக்காமல், கை அசைக்காமல் சிலை போல் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இது தொண்டர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு தொண்டர்களுடன் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
 
விஜயகாந்த் வழக்கமாக இல்லாமல், யாரையும் பார்த்து சிரிக்காமல் சிலை போல் அமர்ந்து இருந்தார். மேடையில் தொண்டர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட போதும் யாரையும் பார்த்து புண்ணகைக்கவில்லை. இது தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.
 
சில நாட்களுக்கு முன் விஜயகாந்த தொண்டர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவர் சிலை போல் அமர்ந்து தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இது பெரிய ஆச்சரியமான ஒன்றாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.