திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (21:01 IST)

தங்கை வீட்டிற்கு சென்ற தளபதி விஜய்: நெகிழ்ச்சியில் ஸ்டண்ட் சில்வா

சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களில் ஒருவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா அவர்களின் தங்கை கணவர். இதனை ஸ்டண்ட் சில்வா தனது டுவிட்டரில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இதனையறிந்த பலரும் சில்வாவுக்கு ஆறுதல் கூறினர்.
 
இந்த நிலையில் நேற்றிரவு தளபதி விஜய் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் 13 பேர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய உறவினர்களுக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார். அவ்வாறு ஆறுதல் பெற்று நிதியுதவி பெற்றவர்களில் ஒருவர் ஸ்டண்ட் சில்வாவின் தங்கையும் ஆவார். 
 
இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா தனது டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் கூடிய ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச் சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி' என்று கூறியுள்ளார்.