1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (08:35 IST)

வீரபாண்டி ராஜா மாரடைப்பால் மரணம்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். 
 
திமுகவின் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா தனது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பும் போது மயங்கி விழுந்துள்ளார். 
 
இதனையடுத்து அவர்  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் டாக்டர்கள் பரிசோதித்து அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். வீரபாண்டி ராஜா கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.