1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (21:17 IST)

திமுக அறிவித்த தேதியில் கடையடைப்பு நடத்துவது சாத்தியமில்லை. வணிகர்கள் சங்கம்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25 ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 


ஏற்கனவே வரும் மே மாதம் 5ஆம் தேதி வணிகர்கள் தினம் வருவதால் அன்றையை தினம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தி விழுப்புரத்தில் பிரமாண்டமான மாநாடு நடத்த வணிகர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி வணிகர்கள் கடையடைப்பு நடத்துவது சாத்தியமில்லை என்றும் திமுக அறிவித்துள்ள போராட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று திமுக கடையடப்பு தேதியை மறுபரிசீலனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்