திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (09:54 IST)

தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு

தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு

கோவில்பட்டியில் தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நலகூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இதற்கா ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று வைகோ தனது ஆதரவாளர்களுடன் மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது, தேவர் சிலைக்கு மாலை போட வைகோ முயன்ற போது பிரச்சனை வெடித்தது. இதனையடுத்து, தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். மேலும், மாற்று வேட்பாளரான விநாயகா ஜி.ரமேஷ் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
 
மனு தாக்கலுக்கு பின்பு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிரசார வேனில் நின்றபடி செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார்.
 
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி, தேர்தல் பறக்கும் படை அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான வேலுமயில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வைகோ மீது போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனர்.