திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (08:48 IST)

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நுழைவாயில் அருகே தீ வைத்த மர்ம நபர்.. போலீசார் வலைவீச்சு..!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில் அந்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் திடீரென அவர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை கீழே ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்த தீ கொழுந்து விட்டு எரிய எரிய அவர் மேலும் மேலும் பெட்ரோல் ஊற்றியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக கபாலீஸ்வரர் கோயில் கதவுக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் மயிலாப்பூர் கோவில் அருகே தீ வைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபரை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

Edited by Siva