செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (21:39 IST)

ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மெடிக்கல் சீட் பெற்ற உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் திருப்பதியில்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உதித் சூர்யாவின் மேல் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் அவரது தாய் கயல்விழி மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரையும் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தேனி சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 
 
 
இந்நிலையில் அவர்களிடம் இன்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திய விசாரணையில் மகனுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத  வைத்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
 
இந்த நிலையில் இருவரையும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் சற்றுமுன் ஆஜர்படுத்தினர்,. நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான உதித் சூர்யா, தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க  தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து உதித் சூர்யா, டாக்டர் வெங்கடேசன் ஆகிய இருவரும் வரும் அக்டோபர் 10 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது