ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வேதவல்லி
Last Updated : சனி, 14 மே 2016 (16:26 IST)

திமுகவை புறக்கணித்த உதயநிதி ஸ்டாலின்

திமுகவை புறக்கணித்த உதயநிதி ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகனும், திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளாமல் நழுவிட்டார்.
 

 
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்காக அக்கட்சி தலைவர்களும், அதன் கூட்டணித் தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
அதிலும், குறிப்பாக அதிமுகவுக்கு தமிழகத்தில் உள்ள திரைப்பட பிரபலங்கள் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
ஆனால், திமுகவுக்கு ஆதரவாக தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் இந்தமுறை, தேர்தல் பிரசாரம் செய்யமுன்வரவில்லை.
 
அது போலவே, திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், திமுக பொருளாளரும், உதயநிதி ஸ்டாலின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
 
அது போலவே, தமிழகம் முழுவதும் உள்ள திமுக வேட்பாளர்கள் யாருக்கும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்யமுன்வரவில்லை.
 
இவ்வளவு ஏன், அவரது நண்பரும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவருமான அன்பில் மகஷே்-கு கூட தேர்தல் பிரசாரம் செய்யவில்லை.
 
உதயநிதி ஸ்டாலின் தற்போது பொது மக்களிடம்  மிகவும் பிரபலமான நடிகராக இருப்பதால், அவர் தேர்தல் பிரசாரம் செய்தால் திமுகவுக்கு பெண்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். ஆனால், இது எல்லாம் தெரிந்தும் உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருந்துவிட்டார்.
 
அதுபோலவே, கருணாநிதியின் மற்றொரு பேரனும், பிரபல நடிகருமான அருள்நிதியும் உதயநிதி ஸ்டாலின் வழியில் திமுகவை விட்டு தள்ளிநிற்பதாகவே திமுகவினர் குமுறுகின்றனர். திமுக தொண்டர்களின் இந்த உணர்வுகளுக்கு உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகின்றனர் என தெரியவில்லை.