செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:32 IST)

டி.ஆர். பாலு போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுடியில் வெற்றி யாருக்கு?

TR Balu
முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக தடுமாறுவதாக தற்போது வந்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொகுதியில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் வெறும் 2.8 லட்சம் ஓட்டுகள் பெற்ற நிலையே டி ஆர் பாலு 7.93 லட்சம் வாக்குகளை பெற்றார்

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் டி ஆர் பாலு மீண்டும் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவர் எதிர்த்து அதிமுகவின் பிரேம்குமார், நாம் தமிழர் கட்சியின் ரவிச்சந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் அவர்கள் போட்டியிடுகிறார்

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் தீவிர பிரச்சாரம் செய்து வருவதாகவும் டி ஆர் பாலுவுக்கு அந்த தொகுதி மக்களுக்கு இருக்கும் அதிருப்தி காரணமாக அதிமுக வேட்பாளர் ஜெயிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் பெரிய அளவில் வாக்குகளை பிரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால் டி ஆர் பாலு இந்த முறை ஜெயித்தாலும் மிக குறைந்த வித்தியாசத்தில் தான் ஜெயிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva