ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்குமா? நாளை தேர்தல் ஆணையம் முடிவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துவதா ஒத்திவைப்பதா என்பது குறித்து நாளை மாலை நடைபெறும் கூட்டத்திற்கு பின் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு உள்பட 89 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணம் சிக்கியது.
இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. தினகரன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படும். இதுகுறித்து நாளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவை அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பிறகே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தப்படுமா? ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்து தெரியவரும்.