வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:56 IST)

கோடை மழை: கனிசமாக உயர்ந்த தக்காளி விலை!

தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது.

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கனமழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்றது. ஆனால் கடந்த மாதாம் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. விவசாயிகள் பலரும் தக்காளி பயிர் செய்திருந்த நிலையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தது.
 
சந்தைகளில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி கிலோ ரூ.2 அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில், தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. 
 
இந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கும், சில்லரை கடைகளில் ரூ.10-க்கும் விற்கப்பட்டது. ஆனால் தற்போது மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ29-க்கும், மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.35-க்கும் விற்கப்படுகிறது.