1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (05:12 IST)

இன்று சசிகலா-எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு. சென்னை சிறைக்கு மாற்றமா?

நேற்று முன் தினம் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து இன்று பெங்களூர் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெங்களூர் செல்லவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.




நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்து அடுத்தகட்ட முக்கியமான ஆலோசனைக குறித்து சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியு பெங்களூர் செல்வதாகவும், அவருடன் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் செல்வதாகவும் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக முதல்-அமைச்சர் பெங்களூரு வருவதை முன்னிட்டு பரப்பன அக்ரஹாரா சிறை முன் பகுதியில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உரிய முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே சிறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிறைக்கு செல்லும் சாலையில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்

இந்த சந்திப்புக்கு பின்னர் எதிர்த்த வாக்களித்த 11 பேர் மீதான நடவடிக்கை மற்றும் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.