வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

151வது நாள்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 150 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 151வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒபெக்ஸ் பிளஸ் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தவுடன் உலகின் பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனை ஆகி வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Siva