புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (18:33 IST)

52ல் 47 பேர் சென்னையில் மட்டுமே: மற்ற மாவட்டங்களில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் எதிர்பார்த்ததை விட அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 52 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 47 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை கொரோனா பாதிப்பில் கடந்த சில நாட்களாக முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையை அடுத்து இன்று கிருஷ்ணகிரியில் நால்வர் மற்றும் விழுப்புரத்தில் ஒருவர் என சென்னை தவிர ஐந்து பேர்கள் மட்டுமே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த மூன்று மாவட்டங்களை தவிர கொரோனா தொற்று இன்று வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது