கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில், தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை அறிந்த தமிழக அரசு, தற்போது புதிய பயனாளர்களை கண்டறிந்து அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், சில விதிகளையும் தளர்த்தியது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் அறிவித்துள்ள நிலையில், தகுதி இருந்தும் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால், தகுதியான நபர்கள் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 29 லட்சம் மகளிர் உரிமை தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவைகளை மீண்டும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Edited by Siva