புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (11:45 IST)

கணவனை இழந்த தாய்மார்களுக்கு 2000 தையல் மிஷின் இயந்திரம் வழங்கிய அமைச்சர் சி.வெ.கணேசன்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் தனியார் பள்ளி வளாகத்தில் 2000 கணவனை இழந்த தாய்மார்களுக்கு என்எல்சி இந்தியன் கார்ப்பரேஷன் லிமிடெட்  மற்றும் சி எஸ் ஆர் நிறுவனம் சார்பில்  இலவச மோட்டார் உடன் கூடிய  தையல் மிஷின் இயந்திரத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை  அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்
 
அப்போது பேசிய அமைச்சர் சி.வெ.கணேசன் 
 
தன் மனைவியை நினைத்து குலுங்கி குலுங்கி அழுதார் அமைச்சர்.
 
கஷ்டம் வரும் போதல்லாம்  அவர்கள் மனசு வலிக்கும் போதெல்லாம்  இந்த தையல் மெஷின் தான்  அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்
 
வலி ,கஷ்டம், குடும்ப பாரம் எல்லாம் இந்த தையல் மெஷின் தான் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என என்  மனதில் தோன்றியது
 
அதனால் தான் திட்டக்குடி தொகுதியில் இருக்கும் கணவனை இழந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் தாய்மார்கள் எல்லோருக்கும்   தையல் மெஷின் கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.
 
அதற்காக தான் 2000 தாய்மார்களுக்கு முதல் கட்டமாக தையல் மிஷின் வழங்கி உள்ளேன் என அமைச்சர் உருக்கமாக உரை நிகழ்த்தினார் .

இன்னும் திட்டக்குடி தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும்  கணவனை இழந்த தாய்மார்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று கணக்கெடுத்து
என் காட்டை வித்தாவது கொடுப்பேன் என உறுதி கூறினார்.
 
இதனால் அப்பகுதியில் பொது மக்களின் கண்களில்  கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது  அமைச்சர் என்எல்சி நிர்வாகத்திடம் திட்டக்குடி தொகுதியில் 8000 விதவை தாய்மார்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் கூடிய விரைவில் வழங்குமாறு கேட்டு கொண்டார்