1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:49 IST)

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முழு விவரங்கள்..!

தமிழகத்தில் அதிரடியாக ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழக அரசு அவ்வப்போது நிர்வாக காரணங்களுக்காகவும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்கவும் இடமாற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் தற்போது ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி
 
1. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்.
 
2. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம்.
 
3. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.
 
4. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமனம்.
 
5. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்.
 
6. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva