திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 11 மே 2017 (19:34 IST)

11-ஆம் வகுப்புக்கும் இனிமேல் பொது தேர்வு: பரிசீலித்து வரும் அரசு!

11-ஆம் வகுப்புக்கும் இனிமேல் பொது தேர்வு: பரிசீலித்து வரும் அரசு!

இதுவரை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் அரசு பொது தேர்வு இருந்து வந்தது. இனிமேல் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் அரசு பொது தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது மதிப்பெண்கள் எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதனையடுத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவில் ரேங்கிங் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
 
ரேங்கிங் முறையை ஒழித்துள்ள அரசு அதற்கு பதிலாக சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ முறையில் எழுதும் மாணவர்களின் தேர்வு முறையை போலவே முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 
மேலும் மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் அடுத்ததாக புதிய அறிவிப்பு ஒன்றும் வந்துள்ளது.
 
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை கருத்தில் கண்டு இந்த முடிவு எடுக்க உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.