1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (16:55 IST)

மாவட்ட ஆட்சித்தலைவர் தளர்வுகளை அறிவிக்கக் கூடாது: முதல்வர் அறிவிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்துதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டித்தல் குறித்த முடிவு எடுப்பது ஆகியவற்றுக்காக மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது:
 
ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக் கூடாது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்றும் சமூக இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமே நோய் தொற்று அதிகம் பரவுவதால், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசி உள்ளார். ஆனால் அதே நேரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பணி செய்ய விரும்பினால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்