1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (18:33 IST)

நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு..!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்பட ஏழு மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளையும் நெல்லை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 
 
குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் நெல்லை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில தென் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva