1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூலை 2023 (14:44 IST)

சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னையில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 48 எட்டு மணி நேரத்தில் சென்னையில் உள்ள பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva